ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புதிய காயங்கள்.. இது தற்கொலை அல்ல - சீரியல் நடிகை மரணத்தில் பகீர் கிளப்பிய தந்தை!

புதிய காயங்கள்.. இது தற்கொலை அல்ல - சீரியல் நடிகை மரணத்தில் பகீர் கிளப்பிய தந்தை!

டுனிஷா

டுனிஷா

துனிஷாவின் மரணத்திற்கு அவரின் காதலன் ஷீசன் முகம்மதுதான் காரணம் என அவரது தாய் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] |

பாரத் கா வீர் புத்ரா, அலி பாபா தஸ்தான்-இ-காபூல் உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் துனிஷா. இவர், கடந்த டிசம்பர் 24 அன்று  படப்பிடிப்பு தளத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. டிசம்பர் தொடக்கத்தில் அவருக்கும் அதே சீரியலில் நடிக்கும் ஷீசன் முகம்மது என்பவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

துனிஷாவின் மரணத்திற்கு அவரின் காதலன் ஷீசன் முகம்மதுதான் காரணம் என அவரது தாய் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ஷீசன் முகம்மதுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இதே போல் 2016 இல் தனது காதலன் ராகுல் சிங்கை பிரிந்த பிறகு தனது ஓஷிவாரா குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஹிந்தி பிக்பாஸில் கலந்துகொண்ட நடிகை பிரத்யுஷா பானர்ஜியின் தந்தை இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பிரத்யுஷாவின் தந்தை தனது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டார். மேலும்  “துனிஷா பற்றிய செய்தியை படித்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. திடீரென்று என் பழைய காயங்கள் எல்லாம்  புதிதாக மாறியது போல் இருந்தது. இதே போல் இறந்தவரின் தந்தையாக இருப்பதால், துனிஷாவின் அம்மாவின் நிலையை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “உண்மையைச் சொல்வதானால், துனிஷாவின் மரணம் ,  எனக்கு கொலையாகவே தோன்றுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அனைத்து கொலைகளும் தற்கொலை வடிவில் கொடுக்கப்படுகின்றன. சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் அப்படித்தான் நடந்தது." என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: Actress, Suicide