விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் டீசர் ரிலீஸ்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
- News18 Tamil
- Last Updated: January 11, 2021, 1:22 PM IST
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணி இணைந்துள்ளது. இவர்களுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'கோப்ரா', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
கடந்த ஜூலை மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனக்குள் இன்னொருவன் இருந்து தன்னை ஆட்டிப்படைப்பதாக கூறுகிறார் விஜய் சேதுபதி. அவனால் கடுப்பாகிறார் பார்த்திபன். மேலும் கண்ணை படக் படக்கென அடித்து நடிப்பில் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்