டொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் | டொனால்டு டிரம்ப்

 • Share this:
  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்பதாக டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றுள்ளனர்.

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அவர், சபர்மதி காந்தி ஆசிரமம், மொதோரா மைதானம், தாஜ்மகால் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

  இன்று இரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டொனால்ட் டிரம்புக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

  மேலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல சமையல் கலைஞர் விகாஷ் கண்ணா ஆகியோரும் ட்ரம்பின் இரவு விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியாவுடன் கைகுலுக்கி பேசுகிறார். முன்னதாக ட்ரம்பின் வருகையையொட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், காந்தியின் தேசத்துக்கு வரவேற்பதாக கூறி திருக்குறளுடன் தொடங்கும் அஹிம்சா என்ற பாடலை பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: பல வருடங்களுக்குப் பின் சர்ச்சையாகும் புன்னகை மன்னன் முத்தக்காட்சி!
  Published by:Sheik Hanifah
  First published: