சிரஞ்சீவி படத்திலிருந்து விலகியது ஏன்? த்ரிஷா விளக்கம்!

நடிகை த்ரிஷா.

 • Share this:
  சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

  கொரட்டலா சிவா இயக்கத்தில் ராம் சரண் தயாரிப்பில் சிரஞ்சீவி தனது 152-வது படத்தில் நடித்து வருகிறார். ஆச்சாரியா என்ற டைட்டிலுடன் உருவாகி வருவதாக கூறப்படும் இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைக்கிறார்.

  இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தாமல் இருந்த நிலையில் படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் த்ரிஷா, “தொடக்கத்தில் நாம் என்ன பேசினோமா, ஆலோசித்தோமோ சில நேரங்களில் அது பின்னாளில் மாறிலாம். கலை வேற்றுமையின் காரணமாக நான் சிரஞ்சீவியின் படத்திலிருந்து விலகி விட்டேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் அன்புக்குரிய தெலுங்கு ரசிகர்களை விரைவில் நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.  பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க: என்னுடைய குடும்பத்தை விட்டு விடுங்கள்... தர்ஷன் - சனம் ஷெட்டி விவகாரத்தில் மவுனம் கலைத்த ஷெரின்!
  Published by:Sheik Hanifah
  First published: