கில்லி - 96 பட காட்சிகளை இணைத்து த்ரிஷா போட்ட ட்வீட் - ரசிகர்கள் கமெண்ட்

கில்லி | 96

கில்லி, 96 ஆகிய இரண்டு படங்களுமே த்ரிஷாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களாகும்.

  • Share this:
‘96’ மற்றும் ‘கில்லி’ படத்தின் காதல் காட்சிகளை ஒன்றாக இணைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் த்ரிஷா. கடைசியாக கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இக்குறும்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷா, ‘கில்லி’, ‘96’, ஆகிய படங்களின் காட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு அதற்கு ‘டூ இன் ஒன்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க: ஜெயலலிதாவாக நடிப்பதற்கு இத்தனை கிலோ உடல் எடை அதிகரித்தாரா கங்கனா ரனாவத்?

கில்லி, 96 ஆகிய இரண்டு படங்களுமே த்ரிஷாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களாகும். இரண்டு படங்களும் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டவை என்பதோடு வசூலையும் வாரிக் குவித்தது.த்ரிஷாவின் இந்த ட்விட்டர் பதிவு ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. மேலும் கில்லி தனலட்சுமி மற்றும் 96 ஜானுவின் திறமையான நடிப்பைப் பாராட்டியும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர் அவரது தீவிர ரசிகர்கள்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: