ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நடிகை த்ரிஷா தன் டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் தன்னுடைய இன்பாக்ஸிலிருந்து வரும் எந்த மெசேஜ்க்கும் யாரும் பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின் த்ரிஷா நடித்து வெளிவந்த 96 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது. இந்தப் படத்தில் த்ரிஷா ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காதல் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியங்கள் இருந்தும் சின்ன சின்ன தயக்கத்தினால் காதலை சொல்லாமலே தோல்வியடையும் 70களில் பிறந்தவர்களின் காதல் கதையே 96 திரைப்படத்தின் கதையாகும்.

96 திரைப்படத்தின் வெற்றியின் வெளிச்சமே ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை த்ரிஷா தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தற்போது பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய் இன்பாக்ஸில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ‘ஹேக் பண்ணின உன் அக்கவுண்டலிருந்து ஒரு மெசேஜ் வராதா ஜானு’ என்று ஏக்கத்துடன் கேட்டுள்ளனர்.

First published:

Tags: 96 movie, Trisha, Trisha account hacked, Trisha twitter page, Twitter