15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...

15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...

நடிகை த்ரிஷா

லூசிஃபர் படம் தமிழில் ரீமேக்காகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார்.

  • Share this:
    15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சிரஞ்சீவியுடன், நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் பிரித்வி ராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘லூசிஃபர்’. 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல்வாதியின் மறைவுக்குப் பிறகு அவரது மருமகனுக்கும், வளர்ப்பு மகனுக்கும் இடையே நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறியிருந்தார் ப்ரித்வி ராஜ். அதோடு வசூலிலும் சாதனை படைத்தது. அதாவது 200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை லூசிஃபர் படம் பெற்றது.

    க்யூட்டாக பாடும் கீர்த்தி சுரேஷ் – ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

    இந்நிலையில் தற்போது லூசிஃபர் படம் தமிழில் ரீமேக்காகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். தற்போது இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழுக்கு ஏற்றாவாறு சில மாற்றங்களை செய்த இயக்குநர் சிரஞ்சீவிக்கு சில காதல் காட்சிகளை இணைத்திருக்கிறாராம்.

    இதையடுத்து சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். திரிஷாவும், சிரஞ்சீவியும் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ஸ்டாலின் என்கிற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தவிர, மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை திரிஷா ’உனக்கும் எனக்கும்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: