டிராவல் செய்யும் போது கூட பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வரும் த்ரிஷா..

நடிகை த்ரிஷா

மணிரத்னம் படத்திற்காக நடிகை த்ரிஷா தீவிரமாக பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து வருகிறார்.

 • Share this:
  மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், அமிதாப் பச்சன், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் தலைமுடிகளை நீளமாக வளர்த்து வந்தனர்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் எடுக்கப்பட்டது. 90 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்பு கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த படத்தில் இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆதித்தய கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள்.

  சமீபத்தில் ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடர்ச்சியாக 30 நாட்களை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதுவரை 70 % படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  இந்நிலையில் நடிகை த்ரிஷா மணிரத்னம் படத்தில் நடிப்பதை முன்னிட்டு பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிப்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.  பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
  Published by:Tamilmalar Natarajan
  First published: