தனக்கு பிடித்த 3 நடிகர்களை பட்டியலிட்ட த்ரிஷா..!
தனக்கு பிடித்த பாடலாக மன்னிப்பாயா பாடலையும், பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும் கூறியுள்ளார் த்ரிஷா.

நடிகை த்ரிஷா. (Image: Instagram)
- News18 Tamil
- Last Updated: May 14, 2020, 2:38 PM IST
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷா தனக்கு பிடித்த நடிகர்களை ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் திரைத்துறை பிரபலங்கள் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அதில் நேரலையில் வந்து ரசிகர்களிடம் உரையாடும் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷாவிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் தனக்கு பிடித்த பாடலாக மன்னிப்பாயா பாடலையும், பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும் கூறியுள்ளார்,. மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம் என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளிக்காத த்ரிஷா, தனக்கு பிடித்த 3 நடிகர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன், இரண்டாவதாக மோகன்லாலையும், மூன்றாவதாக நடிகர் அமீர் கானையும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் உடன் தூங்காவனம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்திருந்த த்ரிஷா, மோகன்லால் உடன் ராம் என்ற படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் திரைத்துறை பிரபலங்கள் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அதில் நேரலையில் வந்து ரசிகர்களிடம் உரையாடும் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷாவிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் தனக்கு பிடித்த பாடலாக மன்னிப்பாயா பாடலையும், பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும் கூறியுள்ளார்,. மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம் என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளிக்காத த்ரிஷா, தனக்கு பிடித்த 3 நடிகர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன், இரண்டாவதாக மோகன்லாலையும், மூன்றாவதாக நடிகர் அமீர் கானையும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.