ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாலிவுட் பிரபலம் இல்லை... பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா!

பாலிவுட் பிரபலம் இல்லை... பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா!

நடிகை த்ரிஷா. (Image: Instagram)

நடிகை த்ரிஷா. (Image: Instagram)

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் த்ரிஷா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  செக்கச் சிவந்த வானம் படத்துக்கு பிறகு கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வனை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் லால் இணைந்திருப்பதாக அவரே அறிவித்திருந்தார்.

  படிக்க: 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் தேசிய விருது பெற்ற நடிகை!

  இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நடிகை த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார்.

  இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார். அதேவேளையில் இந்தப் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. தாய்லாந்து காடுகளில் படத்தின் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

  வீடியோ பார்க்க: ஆபாசப்படம் பார்ப்பவர்களின் List ரெடி அடுத்து கைது தான் -தமிழ்நாடு காவல்துறை

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Ponniyin selvan