• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி - இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து

திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி - இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து

டி.ராஜேந்தர் அணி

டி.ராஜேந்தர் அணி

  • Share this:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் அணி வெற்றிபெற்றுள்ளது.

532 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தல் அண்ணா சாலை மீரான் சாஹிப் தெருவில் இருக்கும் விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருடன் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மன்னன், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பாபு ராவ் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் டி.ராஜேந்தர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதில் அவர் கூறப்பட்டிருப்பதாவது, “சினிமா நாம் மக்களோடு பேசும் மொழி. அதை ஒவ்வொரு பகுதியாக நுழைந்து மக்களிடம் கொண்டுசெல்லும் விநியோகஸ்தர்கள் உழைப்பின் தேனீக்கள். சமீபத்தில் அந்த உழைப்பாளர்களின் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் ஜனநாயக முறையோடு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
மொழியறிவு செறிந்த நண்பர் டி. ராஜேந்தருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளராகவும், படைப்பாளியாகவும் இருந்து அனுபவம் பெற்றவர். சுய நல நோக்கமற்றவர்.

மேலும் படிக்க: உதவி இயக்குநருடன் நடிகைக்கு நிச்சயதார்த்தம்! - வைரலாகும் புகைப்படம்

தயாரிப்பாளர்கள் படைப்பாளிகளின் நன்மை உணர்ந்து பலமான ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுவார் நம் டி.ஆர் என்ற நம்பிக்கை உள்ளது. நல்ல மாற்றங்கள் நிகழவும், சினிமாவின் வளர்ச்சிக்கு பயனுள்ள திட்டங்களை வகுக்கவும் வெற்றி பெற்ற அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள். அவருடன் வெற்றிபெற்ற அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் என் வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: