Colors Tamil:சண்டே சினி காம்போ! உலகளவில் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டிராஃபிக் ராமசாமி திரைப்படம்..

திரைப்படம்

இந்த வாரம் ஞாயிறு அன்று அடுத்தடுத்து இரண்டு சூப்பரான படங்களை ஒளிபரப்ப செய்ய உள்ளது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.

  • Share this:
    பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சிறப்பான திரைப்படங்களை ஒளிபரப்பி, திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில், இயக்குனரும், நடிகருமான எஸ்ஏ. சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்த டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலகளவில் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மூலம் இந்த மகிழ்ச்சியை இன்னும் உயர எடுத்துச் செல்லவிருக்கிறது.

    சமூக செயற்பாட்டாளராக தமிழகத்தில் வாழ்ந்து, சமீபத்தில் மறைந்த திரு. டிராஃபிக் ராமசாமி என்பவரது நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே டிராஃபிக் ராமசாமி. சமூக நலனுக்கான செயல்பாட்டில் உத்வேகமளிக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பிரபல நடிகர்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரோகிணி, லிவிங்ஸ்டன், அம்பிகா, விஜய் ஆண்டனி, குஷ்பு சுந்தர், சீமான் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நடிப்பில், விக்கி இயக்கியிருக்கிறார். தமிழ்நாடு மாநிலத்தில் மனுக்கள், வழக்குகள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் வழியாக ஊழல் மற்றும் சட்டத்திற்கெதிரான தீமைகளுக்குத் தீர்வுகாண முற்பட்ட டிராஃபிக் ராமசாமி மற்றும் அவரது புரட்சிகரமான, நடவடிக்கைகளை இத்திரைப்படம் நேர்த்தியாக சித்தரிக்கிறது. சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர அவர் எதிர்கொண்ட தொடர் போராட்டத்தையும் இக்கதை முன்னிலைப்படுத்துகிறது.

    எல்லாமே என் ராசாதான் என்பது, 1995 ஆம் ஆண்டில், பிரபல நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரண் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகும். பிரபல நடிகைகள் சங்கீதா மற்றும் ரூபஸ்ரீ ஆகிய இருவரும் இதில் நடித்திருக்கின்றனர். தனது மனைவியின் கொலைக்கு பழிதீர்க்க தனித்திருக்கும் ஒரு கிராமத்திற்கு தனது மகளோடு பயணிக்கும்  சிங்கராசின் வாழ்க்கையை இது சித்தரிக்கிறது. கொலையாளியை தண்டிப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தவும் சிங்கராசு முற்பட, அதன்பிறகு  ஏற்படும் நிகழ்வுகள் தான் கதையின் மையமான, அதிரடித் திருப்பமாக அமைகிறது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தில் வடிவேலு வின் “எட்டணா இருந்தா பாடலும் இடம்பெற்றுஇருக்கிறது.

    இந்த இரண்டு திரைப்படங்களும் ஞாயிறு அன்று அடுத்தத்து ஒளிப்பரப்பாக உள்ளது.இது சினிமா பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
    Published by:Tamilmalar Natarajan
    First published: