• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Top Tucker : ட்ரெண்டிங்கில் அசத்தும் யுவன் - ராஷ்மிகாவின் டாப் டக்கர் பாடல்

Top Tucker : ட்ரெண்டிங்கில் அசத்தும் யுவன் - ராஷ்மிகாவின் டாப் டக்கர் பாடல்

யுவன் உடன் ராஷ்மிகா மந்தனா (போட்டோ: u1records.com)

யுவன் உடன் ராஷ்மிகா மந்தனா (போட்டோ: u1records.com)

டாப் டக்கர் பாடல் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  • Share this:
    அமர் ப்ரீத் ஷாப்ரா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல் டாப் டக்கர். உச்சனா அமித் பாத்ஷா, யுவன் சங்கர் ராஜா, ஜோனிடா காந்தி ஆகியோர் குரலில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடலில் ராஷ்மிகா மந்தனா நடனமாடியுள்ளார். தமிழ் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஒய்ஆர்எஃப் மற்றும் சாகா மியூசிக் இணைந்து இந்தப் பாடலை தயாரித்திருக்கிறது.

    சமீபத்தில் இந்தப் பாடலில் யுவன் சங்கர்ராஜாவுடன் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து பணியாற்றிய போட்டோக்கள் மற்றும் பாடலின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது. தற்போது 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கும் இந்தப் பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.



    கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்திய ராஷ்மிகா கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்து தமிழில் நாயகியா க அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கு, கன்னடம், தமிழ் மட்டுமல்லாது மிஷன் மஞ்சு என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நாயகியாக அறிமுகமாக உள்ளார் ராஷ்மிகா. அவரது ரசிகர்களுக்கு டாப் டக்கர் பாடல் விருந்தாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: