Home /News /entertainment /

Vijay Tv Serial | விஜய் டிவியின் லேட்டஸ்ட் TRP ரேட்டிங் - முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

Vijay Tv Serial | விஜய் டிவியின் லேட்டஸ்ட் TRP ரேட்டிங் - முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

Vijay TV

Vijay TV

Vijay Tv Serial | வித்தியாசமான கதைகள் மற்றும் விறுவிறுப்பான எபிசோட்கள் மூலம் மக்கள் மனத்தை கவரும் வகையில் சீரியல்கள் இருப்பதால் காலங்கள் மாறினாலும் சீரியல்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது.

    சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன பிரபல டிவி சேனல்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    வித்தியாசமான கதைகள் மற்றும் விறுவிறுப்பான எபிசோட்கள் மூலம் மக்கள் மனத்தை கவரும் வகையில் சீரியல்கள் இருப்பதால் காலங்கள் மாறினாலும் சீரியல்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் அப்படியே இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ரியாலிட்டி ஷோக்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டாலும் கூட திங்கள் முதல் சனி வரை, காலை துவங்கி இரவு முதல் பல முன்னணி சேனல்களில் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகின்றன.

    கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என பல சேனல்களில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி ஆகிய 2 சேனல்களுக்கு இடையில் தான் எப்போதும் நேரடி போட்டி இருக்கும். வாரா வாரம் வெளியாகும் TRP ரேட்டிங் லிஸ்ட்டில் பெரும்பாலும் டாப் 10 சீரியல்களில் இந்த 2 சேனல்களின் சீரியல்கள் மட்டுமே இருக்கும். கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள அதே நேரத்தில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் மூலமும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து உள்ளது.

    Read More : பயங்கர வெயிட் லாஸ்.. விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு?


    ஸ்டார் விஜய் டிவி. விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    இதனிடையே மக்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் சமீபத்திய TRP ரேட்டிங் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் இங்கே சமீபத்திய நாட்களில் விஜய் டிவி சீரியல்களில் மக்கள் எந்த சீரியலை அதிகம் பார்த்து ரசித்துள்ளார்கள் என்பதற்கான தகவலை பார்க்கலாம். சில வாரங்களாக விஜய் டிவி சீரியல்களில் ராஜா ராணி 2 முதலிடத்தில் இருந்த நிலையில், இதனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல். பாரதி தான் தனது அப்பா என்பதை அறிந்து லட்சுமி செய்யும் செயல்கள் மக்களை அதிகம் கவர்ந்ததால் தற்போது முதளிடம் பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியல்.

    இதற்கு அடுத்து இரண்டாமிடத்தை பாக்கியலட்சுமி, மூன்றாமிடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ், நான்காமிடத்தை ராஜா ராணி 2, ஐந்தாமிடத்தை தமிழும் சரஸ்வதியும் சீரியல்கள் பிடித்துள்ளன. ஆறு மற்றும் ஏழாம் இடத்தை முறையே மௌனராகம் 2, ஈரமான ரோஜாவே 2 சீரியல்களும் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Entertainment, Vijay tv

    அடுத்த செய்தி