• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • 2019-ன் டாப் 10 யூடியூப் சேனல்கள் பட்டியல்... அடித்து நொறுக்கிய தமிழ்..!

2019-ன் டாப் 10 யூடியூப் சேனல்கள் பட்டியல்... அடித்து நொறுக்கிய தமிழ்..!

யூடியூபில் அதிகம் பார்க்கும் சேனல்களில் தமிழ் மொழிதான் அதிகம்..!

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் யு-டியூப் அந்த ஆண்டு மக்கள் அதிகம் பார்த்த வீடியோ மற்றும் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டும் YouTube Rewind 2019 & For the Record என்ற பெயரில் டாப் 10 யூடியூப் சேனல்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  அந்த பட்டியலில் முதல் இடத்தில் கிராண்ட் ஃபா கிச்சன் 6.64 மில்லியன் சந்தாதார்களைக் கொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த தாத்தா ஒருவர் இலைஞர்களோடு இணைந்து சமைக்கும் இந்த சேனல் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. பந்தி வைக்கும் அளவுக்கு இவர் சமைக்கும் ரெசிப்பீக்களின் வாசனை பட்டி தொட்டி எங்கும் வீசியது என்றால் ஐயமில்லை.  இரண்டாம் இடத்தில் தமிழ் சேனலான மைக் செட் 3.96 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மைக் செட் ராம் செய்யும் குறும்புத் தனம் நிறைந்த வீடியோ குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் ரசிக்க வைக்கும். பாண்டிச்சேரி பாய்ஸ் நடத்தும் 2017 தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனல் மூன்றே ஆண்டுகளில் இந்த சாதனை பெற்றிருப்பது பெரும் வளர்ச்சிதான்.  அடுத்ததாக கரிக்கு என்ற மலையாளச் சேனல் இடம் பெறுள்ளது. கரிக்கு என்றால் இளநீர் என்று அர்த்தம். 3.71 மில்லியன் சந்தாரர்களைக் கொண்ட இந்த சேனல் ’தேராபேரா’ என்ற வெப் சீரீஸ் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றது. வேலையில்லாமல் சுற்றித்திரியும் நான்கு ரூம்மேட்டுகளின் அன்றாட வாழ்க்கையை பேசுவதே இந்த சீரீஸ்.  வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி 3.39 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு நான்காம் இடத்தில் உள்ளது. இவரும் ஆந்திரா தாத்தாவைப் போன்று பிரபலமான யூடியூப் தாத்தா. இவரும் ஊருக்கே பந்தி வைப்பது போல் சமைத்துவிட்டு தான் அதை ருசிக்கும் அழகு நமக்கே எச்சில் ஊறும். கிராமத்து வாசனையோடு சமைக்கும் இவரை டாடி ஆறுமுகம் என்றும் அழைப்பார்கள்.  ஐந்தாம் இடத்தை பிடித்த மதன் கௌரி 2.77 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார். 2K கிட்ஸ்கள் இவரது பலம்  பிளாக் ஷீப் 2.71 மில்லியன் சந்தாதாரர்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. பிளாக் ஷீப் சேனல் தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்த சேனல் சென்றால் நம்மை பொழுதுபோக்கும் அனைத்து விஷயங்களும் கிடைக்கும். . தற்போது இவர்களின் வெப் சீரீஸுகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக ஃபன் பன்றோம், உனக்கென்னபா, கோமாளி, அவள் போன்ற சீரீஸ் அதிகம் பேரால் ரசிக்கக் கூடியது. எப்போதும் கலகலவென இருக்கும் இந்த பாய்ஸ் குழு மக்களையும் கலகலப்புடனே வைத்துக்கொள்கின்றனர்.  ஏழாம் இடத்தில் மதுரா’ஸ் ரெசிப்பி மராத்தி சேனல் 2.56 மில்லியன் சந்தாதாரகளைக் கொண்டுள்ளது. இதுவும் வகை வகையான உணவுகளை நாவூற செய்து காண்பிப்பதில் தனித்துவம் கொண்ட சேனல்.குறிப்பாக மாமியார் மருமகள் இணைந்து சமையல் செய்வதுதான் இந்த சேனல் இந்த இடத்தை எட்டியிருப்பதன் சிறப்பு.  2.5 மில்லியன் சந்தாதாரகளுடன் எம் 4 டெக் என்ற சேனல் எட்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டே ஆண்டுகளில் இந்த சாதனை என்பது பேசுபொருளே.! இது டெக் நியூஸ் தொடர்பான செய்திகளை துல்லியமாக அளிப்பதில் சிறப்புப் பெற்றது. இரண்டு இளைஞர்களால் நடத்தப்படும் இந்த சேனலில் ’அன்பாக்ஸிங்’ வீடியோக்க்கள்தான் பிரபலம்.குறிப்பாக இஞ்சினியர் மூளை என்று சொல்லும் வாக்கியத்திற்கு இவர்களின் வீடியோ சிறந்த உதாரணம்.  ஒன்பதாம் இடத்தில் மீண்டும் தமிழ் சேனல் நக்லைட்ஸ் இடம் பெற்றுள்ளது. 2.28 மில்லியன் சந்தாதாரர்களை இந்த சேனல் பெற்றிருக்கின்றதெனில் அதன் கிராமத்து மணமே காரணம். கோயம்புத்தூர் கொங்கு தமிழ் பேச்சுதான் இந்த சேனலின் சிறப்பு அம்சம். இவர்களின் அம்மா அலப்பறைகள் பலராலும் ரசிக்கப்பட்டதோடு பகிரப்பட்டதும் அதிகம். அரசியலை லாவகமாகக் கையாளுவதிலும் இந்த சேனல் கில்லாடி.  எருமசாணி வந்த புதிதிலேயே பலரால் பேசப்பட்டது. அதற்குக் காரணம் எருமசாணி ஹரிஜாவுக்கும் முக்கிய பங்கு உண்டு எனலாம். இவர்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், திருமண வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களை தத்ரூபமாகக் காட்டுவதில் அசால்டு காட்டுவார்கள். தங்கள் சேனலை நாடி வரும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் இந்த சேனல் 2.22 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு 10 வது இடத்தில் உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: