Master | என்ன நண்பா ரெடியா? மாஸ்டர் படக்குழுவின் அதிரடி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம்

Master | என்ன நண்பா ரெடியா? மாஸ்டர் படக்குழுவின் அதிரடி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம்

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படம் குறித்து நாளை மதியம் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக மாஸ்டர் படக்குழு அறிவித்துள்ளது.

  • Share this:
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர். மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ரசிகர்கள் படத்தின் டீசரையாவது வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மாஸ்டர் படத்தின் டீசர் தற்போது 5 கோடி பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய், இன்று தமிழக முதலமைச்சரை சந்தித்து திரையரங்குகளில் நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், மாஸ்டர் படம் குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை மதியம் 12.30 மணிக்கு வெளியிட உள்ளதாக மாஸ்டர் படத்தின் குழு ட்விட்டரில் அறிவித்துள்ளது. எக்ஸ்.பி.பிலிம் கியேட்டர்ஸ் வெளியிட்டுள்ள இந்த பதிவில் ‘ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்.. தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்.. தயாராக இருங்கள்’ என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Tamilmalar Natarajan
    First published: