வசூல் வேட்டையாடும் ஸ்பைடர்மேன்... இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?

ஸ்பைடர்மேன்

ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் இந்தியாவில் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஸ்பைடர்மேன் படம் இந்தியாவில் வெளியான 4 நாட்களில் 46.66 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது.

  டாம் ஹாலாண்டு நடிப்பில் ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் இம்மாதம் 4-ம் தேதி வெளியானது. அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் உலகம் முழுவதும் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்வெல்லின் அடுத்த படைப்பாக ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுவும் ஐயர்ன் மேன் இல்லாத மார்வெல் படம் எப்படி இருக்கும் என்று பார்க்கவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படை எடுத்தனர். இதன் காரணமாக ஸ்பைடர்மேன் படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

  ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட படங்களில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படம். ஸ்பைடர்மேன் பட வரிசையில் இந்தப்படம் தான் இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படம். 2019-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படங்களில் 2-வது இடம் பிடித்துள்ளது ஸ்பைடர்மேன். முதலிடத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இருக்கிறது.  ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் முதல் நாளில் 10.05 கோடி, 2-ம் நாளில் 8.79 கோடி 3-வது நாளில் 12.41 கோடி, 4-வது நாளில் 15.41 கோடி என மொத்தம் ரூ.46.66 கோடி வசூல் செய்த்துள்ளது  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: