Suryavamsam: பொன்விழா ஆண்டில் விக்ரமனின் சூர்யவம்சம்...!

சூர்யவம்சம்

குற்றாலத்தில் கதை யோசிக்கச் சென்ற போது, வானத்தப் போல படத்தின் ஒரேயொரு காட்சி விக்ரமனின் மனதில் உதித்திருக்கிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் செய்த போது தோன்றிய கதைதான் சூர்யவம்சம். 

  • News18
  • Last Updated :
  • Share this:
விக்ரமனின் சூர்யவம்சம் இன்று 25 வது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. தமிழ் திரைச்சரித்திரத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் சூர்யயவம்சத்துக்கு சிறப்பான இடம் உண்டு.

சூர்யவம்சம் 1997 ஜுன் 27 ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் 24 வருடங்கள் நிறைவுபெறுகிறது. இது அப்படத்தின் பொன்விழா ஆண்டு. குற்றாலத்தில் கதை யோசிக்கச் சென்ற போது, வானத்தப் போல படத்தின் ஒரேயொரு காட்சி விக்ரமனின் மனதில் உதித்திருக்கிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் செய்த போது தோன்றிய கதைதான் சூர்யவம்சம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு அப்பா, கார்த்திக் போன்ற ஒரு மகன். இவர்கள் இருவரையும் சுற்றிய கதை என்றுதான் முதலில் தீர்மானித்திருந்தார். படத்தின் கதையை சரத்குமாரிடம் சொன்னதும், அவருக்குப் பிடித்துப் போய், அப்பா, மகன் இரு கதாபாத்திரங்களிலும் நடிக்கிறேன் என்றிருக்கிறார். அப்படித்தான் சரத்குமார் இரு வேடங்களில் நடிப்பது முடிவானதாம்.

படத்தை தயாரித்த ஆர்.பி.சௌத்ரிக்கு கதை பிடிக்கவில்லை. இதில் என்ன இருக்கிறது என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். விக்ரமனுக்கு கதை மீது இருந்த நம்பிக்கையைப் பார்த்து, அந்த ஒரே காரணத்துக்காக படத்தை தயாரித்துள்ளார். படம் வெளியாகி ,பி,சி என மூன்று சென்டர்களிலும் பட்டையை கிளப்பியது. தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்தார்.

தொலைக்காட்சியில் அதிகம் ஒளிபரப்பான திரைப்படமாக சூர்யவம்சமே உள்ளது. அதேபோல் கிராமத்துப் பேருந்துகளில் இன்னமும் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. தகுதியுள்ள ஒரு மனிதன் தோல்வியடையக் கூடாது, வெற்றி பெற வேண்டும் என்ற மனிதனின் இயல்பான ஆசையை சூர்யவம்சம் அடிநாதமாகக் கொண்டிருந்தது. பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னை தகுதிவாய்ந்தவனாகவும், தனக்கு கிடைக்க வேண்டியதைவிட குறைவாக கிடைத்திருப்பதாகவும் நினைக்கிறான்.

Also read... Unseen Pic : மெட்டி ஒலி நடிகைகள் ஒன்றாக இருக்கும் புகைப்படம்!

அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பாக சரத்குமாரின் சின்னராசு கதாபாத்திரம் இருந்தது. அதனை கைத்தூக்கிவிடும் நாயகியாக தேவயானி. தங்களை பிரதிபலித்ததால்தான், ஒரே பாடலில் சின்னராசு கோடீஸ்வரனானதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களுக்கு இன்றும் மனப்பாடமாக உள்ளன. இட்லி உப்புமா என்றதும் சூர்யவம்சம் படமே தமிழர்களுக்கு நினைவுவரும்.

இன்று சூர்யவம்சம் வெளியானாலும் வெற்றி பெறும். ஆனால், 24 வருடங்களுக்கு முன்பு கிடைத்த மாபெரும் வெற்றி சாத்தியமா என்பது சந்தேகமே. இன்றைய நுகர்வு உலகம் மனிதர்களின் ஆதாரமான நெகிழ்ச்சியையும், பச்சாதாபத்தையும் பெருமளவு காலி செய்துவிட்டது. விக்ரமனால் இன்று படம் இயக்க முடியாமல் போனதே இதற்கு சிறந்த சான்றாகும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: