• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரூ.1.25 கோடி நிதி வழங்கிய அஜித்துக்கு நன்றி - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ரூ.1.25 கோடி நிதி வழங்கிய அஜித்துக்கு நன்றி - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அஜித்

அஜித்

  • Share this:
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி வழங்கியிருக்கும் நடிகர் அஜித்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன.

    அதற்கேற்ப கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் அஜித் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலைஇழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அவரது ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கின்ற அன்புச் சகோதரர் அஜித் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1.25 கோடி வழங்கியிருக்கின்றார். அவருக்கு செய்தி மற்றும் விளம்பர துறையின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    மேலும் படிக்க: கொரோனா : 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை திரைத்துறையில் நஷ்டம்?



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: