டைட்டானிக் படத்திற்கு பிறகு நான் கேலி செய்யப்பட்டேன்-மனம் திறந்த ஹீரோயின்

கேட் வின்ஸ்லெட்

டைட்டானிக் திரைப்படத்திற்கு பிறகு ஏராளமான உடல் ரீதியான அவமானங்களை தான் எதிர்கொண்டதாக அந்த படத்தின் ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஒரு சில படங்கள் மொழிகளை தாண்டி வெற்றிப்பெறும். அப்படிப்பட்ட படம் தான் 1997 ஆம் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளிவந்த ‘டைட்டானிக்’ திரைப்படம்.இந்த படத்தில் கதாநாயகியாக கேட் வின்ஸ்லெட் நடித்திருப்பார். லியார்னாடோ டிகாப்ரியோ கதாநாயகனாக நடித்திருப்பார்.

  ஜாக்,ரோஸ் என்ற கதாபாத்திரம் இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த படம் 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்த படம் 11 ஆஸ்கர் விருதை பெற்றது.இந்த படக்குழுவிருக்கு உலக சினிமா மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

  இந்நிலையில் அந்த படத்தின் கதாநாயகியான கேட் வின்ஸ்லெட் சமீபத்தில் ஆன்லைன் கலந்துரையாடலில் டைட்டானிக் படத்திற்கு பிறகு கிடைத்த அவமானங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் ‘டைட்டானிக் வெளியான பிறகு என்னை நானே பாதுகாத்துக் கொண்டேன். நிறைய உடல் ரீதியான கேலிக்கு உள்ளானேன்.பிரிட்டிஷ் பத்திரிகைகள் என்னிடம் அன்பாக நடந்துக்கொள்ளவில்லை.

  நான் நேர்மையாக இருந்ததால் தான் , நான் விமர்சிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பிரபலமாவதன் அர்த்தம் அதுதான் என்றால், நிச்சயமாக அப்போது அதற்கு நான் தயாராக இல்லை.நான் இன்னும் எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டிருந்தேன், நிறைய பெரிய ஹாலிவுட் படங்களில் வேலை செய்ய நான் தயாராக இல்லை என்று உணர்ந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

   

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: