பழைய பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு... இணையத்தில் வைரலாகும் டிக் டாக் வீடியோ!

லலிதா கிருஷ்ணன்

ரசிக்கும் சீமானே' பாடலுக்கு வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து வரிகளை மாற்றி செய்துள்ள விழிப்புணர்வு டிக்டாக் சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  • Share this:
பழைய பாடல்களுக்கு தத்ரூபமாக டிக் டாக் செய்து புகழ்பெற்ற லலிதாம்பிகை, தற்போது கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்துள்ள டிக் டாக் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டிசேரியைச் சேர்ந்தவர் லலிதாம்பிகை. பரதநாட்டியத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர் டிக் டாக் செயலியில் பழைய பாடல்களுக்கு எக்ஸ்பிரஷன் கொடுக்கும் வீடியோக்களுக்கும் லட்சக்கணக்கில் லைக்குள் குவிகிறது. அவருடைய கணக்கை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.
@lalithakrishna0old version...##fyp ##covid19 ##coronavirus ##foryou♬ original sound - Elakkiya



பழைய பாடல்களுக்கு அதேபோன்ற உடை, அலங்காரம், ஆபரணங்களை அணிந்து தத்ரூபமாக முகப்பாவகங்களை கொடுப்பவர். தற்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  'ரசிக்கும் சீமானே' பாடலுக்கு வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து வரிகளை மாற்றி செய்துள்ள விழிப்புணர்வு டிக்டாக் சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: