GP Muthu : இது யார் வீடு தெரியுதா..? பிரபல அரசியல் தலைவர் வீட்டின் முன் வீடியோ எடுத்து மகிழ்ந்த ஜிபி முத்து

GP Muthu : இது யார் வீடு தெரியுதா..? பிரபல அரசியல் தலைவர் வீட்டின் முன் வீடியோ எடுத்து மகிழ்ந்த ஜிபி முத்து

ஜி.பி.முத்து

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து விஜய்காந்த் வீடு முன்பு செல்ஃபி வீடியோ எடுத்து அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
சில காலங்களுக்கு முன்பு சின்னத்திரை, பெரியத்திரை நடிகர்களை மட்டும் தான் பிரபலங்கள் என அழைத்து வந்தார்கள்.ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் டிக்டாக் மூலம் பலர் பிரபலமடைந்துள்ளனர். அந்த வரிசையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜி.பி.முத்துவும் ஒருவர்.இவர் நாள்தோறும் வெளியிடும் வீடியோக்களுக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.சிலர் இவரின் வீடியோக்களை கலாய்த்தும் பதிவிடுவார்கள்..

மேலும் சமீபத்தில் தான் படத்தில் நடிக்கப்போவதாக கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் வெள்ளை வேட்டி சட்டையில் பட்டுத்துண்டு அணிந்து புகைப்படம் வெளியிட்டார்.

இந்நிலையில் ஜி.பி.முத்து விஜயகாந்த் வீட்டு முன்பு நின்றுக்கொண்டு செல்ஃபி வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில், ‘நண்பர்கள் நான் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு முன்பு நிக்கிறேன்.ரொம்ப நாள் பாக்கனும்னு ஆசை.அன்னாச்சிய பாக்கமுடில ஆனா அவர் வீட்டை பாத்துட்டேன்’ என பேசி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இதையடுத்து ஜி.பி.முத்து தமிழ் சினிமாவில் எந்த படத்தில் நடிக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள சமூக வலைதள வாசிகள் ஆவலாக உள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published: