Home /News /entertainment /

பிக் பாஸில் ஜி.பி.முத்து.. கதறும் ரசிகர்கள்

பிக் பாஸில் ஜி.பி.முத்து.. கதறும் ரசிகர்கள்

ஜிபி முத்து

ஜிபி முத்து

ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கொளுத்திப்போட்டு வருகின்றனர்.

  பிக்பாஸ் சீசன் 5 ப்ரமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ப்ரோகிராமில் பிக்பாஸ்-க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டிஆர்பிலும் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி சக்கப்போடு போடுகிறது. ப்ரமோ வெளியானதில் இருந்து இந்த பிக்பாஸ் சீசனில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் இணையத்தில் கிசுகிசுக்கப்படுகின்றன.

  பிக்பாஸ் சீசன் 5 ப்ரமோ மக்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக தமிழில் உள்ள இன்ன பிற பிரபல தனியார் தொலைக்காட்சிகள் வெவ்வேறு நிகழ்ச்சிகளை கையில் எடுத்திருப்பதால் கண்டெண்ட் கொடுக்கக்கூடிய பிரபலங்களை பிக்பாஸ் இல்லத்திற்கு அனுப்பு முடிவு செய்துள்ளனர்.  இந்த சீசனில் டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.பி.முத்து கண்டெண்டுகளின் சொத்து என்பது நெட்டிசன்களுக்கு நன்றாகவே தெரியும்.  டிக் டாக்கில் லிப் ஸிங் செய்துக்கொண்டிருந்த ஜி.பி.முத்து  ஆரம்பத்தில் ரவுடி பேபி சூர்யாவுடன் இணைந்து ஜோடி நடனம் போட்டு ஜோராக ஃபாலோயர்களை அள்ளினார். ரவுடி பேபியுடன் சண்டை சச்சரவு என அனுதாப அலைகளை தேடினார். இப்போது யூடியூடிப்பில் தனி சேனல் தொடங்கி அட்டாகாசப்படுத்தி வருகிறார். அதுமட்டுமா என்ன சன்னி லியோன் படத்துல நடிக்கிற வாய்ப்பு வேற முத்துவுக்கு வந்திருக்கு.  தனக்கு வரும் லெட்டர்களை படித்தே ஃபாலோயர்களை தேடிக்கொண்டார். ஏலே செத்தப்பயலுவளா.. என முத்து ஆக்ரோஷப்படுவதும் காமெடியானது.  இப்போது ஜி.பி.முத்துவின் ஸ்டைலை காப்பியடித்து பல டிக் டாக் பிரபலங்கள் யூடியூப்பில் கடிதம் வாசிக்க தொடங்கிவிட்டனர்.  பிக்பாஸ் செட்டிற்கு முன்பு ஜி.பி.முத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரே தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு  “ நான் பிக் பாஸுக்கு போகலாமா வேண்டாமா நீங்களே சொல்லுங்க நண்பர்களே” உங்கள் பதிலை  (கமெண்டி தெரிவிக்கவும்) என போட்டுள்ளார். இந்தப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கொளுத்திப்போட்டு வருகின்றனர். அவரது ஃபேஸ்புக் பதிவில் ஜி.பி.முத்து நீங்கள் அதில் எல்லாம் கலந்துக்கொள்ள வேண்டாம். உங்களால் போனும் ஹெட்செட்டும் இல்லாமல் இருக்க முடியாது வேண்டாம் என்று சிலர் கூறியுள்ளனர். பிக்பாஸுக்கு முன்னாடி சென்ற பிரபலங்கள் சிலரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த வீடு உங்கள் பொறுமையை சோதிக்கும் வேண்டாம் என சிலரும் எச்சரித்துள்ளனர். சிலரோ தலைவா நீ பிக் பாஸ் போறன்னு நான் ஸ்டேட்டஸ் போட்டுட்டேன் நீ போய்ட்டு வா என்று அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர்.  பிக்பாஸ் வீடு முன் நின்று கொண்டு போஸ் கொடுத்துவிட்டு, நான் போலாமா வேண்டாமா என்று ஜிபி முத்து, அப்பட்டமா கலந்து கொள்ள போறதை காட்டிக் கொடுத்து விட்டார். முன்னதாக தனது சமூக பக்கங்களில் போட்ட வீடியோவில், சென்னைக்கு ஃபங்கசனுக்கு போறேன்.. ஃப்லைட்டில் போறேன் என்று சொல்லியிருந்தார்.. ஃப்லைட்டில் சென்னைக்கு வந்தது பிக்பாஸ் வீட்டில் நுழையதான் போல..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Big boss tamil, Bigg Boss, Kamal Haasan, TikTok, Youtube

  அடுத்த செய்தி