சன் டிவி சீரியலில் ஹீரோயின் ஆன டிக் டாக் பிரபலம்!

கேப்ரில்லா

‘ஐரா’ படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்து அசத்தினார்.

 • Share this:
  டிக் டாக் பிரபலம் ஒருவர் சன் டிவி-யின் புதிய சீரியலில் ஹீரோயினாகியிருக்கிறார்.

  வெள்ளித்திரையை விட, சின்னத்திரை பிரபலங்களுக்கு எளிதில் ரசிகர்களிடம் ஒருவித நெருக்கம் உண்டாகி விடுகிறது. காரணம் தினந்தோறும் ரசிகர்கள் அவர்களை டிவி-யில் பார்க்கிறார்கள். ஹீரோயின் எனில், தங்கள் வீட்டு பெண் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. வில்லி என்றால், தங்களுக்கே இருக்கும் நிஜ எதிராளி என்பது போல உணர்கிறார்கள்.

  ‘எதிர்ப்பதும், எதிர்ப்பை ஆதரிப்பதும் ஜனநாயகம்’ – வெற்றிமாறன்
  இந்நிலையில் சன் டிவி ‘சுந்தரி’ என்ற புதிய சீரியலை ஒளிபரப்பவிருக்கிறது. இதில் டைட்டில் ரோலில் நடிப்பவர் கேப்ரில்லா செல்லஸ். டிக்டாக் மூலம் பிரபலமாகி, கடந்த 2016-ம் ஆண்டு விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

  தவிர, ‘ஐரா’ படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்து அசத்தினார். இந்நிலையில் தற்போது சீரியல் ஹீரோயினாகியிருக்கிறார். ”சன் டிவி-யில் புதிய துவக்கம் ...."சுந்தரி". என்னோட மக்களே எப்போதும் என்னோட முயற்சி உங்களுக்காக” எனக் குறிப்பிட்டு, சீரியல் ப்ரோமோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கேப்ரில்லா. அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: