• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மிஷ்கின் பெயரில்லாமல் வெளியாகும் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் - விஷால் அறிவிப்பு

மிஷ்கின் பெயரில்லாமல் வெளியாகும் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் - விஷால் அறிவிப்பு

விஷால் | மிஷ்கின்

விஷால் | மிஷ்கின்

  • Share this:
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

    பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

    முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கி நடைபெற்று வந்தது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்க இளையராஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

    இந்தப் படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானதால் படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். இதையடுத்து மீதமிருக்கும் படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார். விஷால் - மிஷ்கின் இடையேயான இந்தப் பிரச்னை தமிழ் சினிமாவில் சர்ச்சையைக் கிளப்பியது.

    இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்று இயக்குநரும், நடிகருமான விஷால் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் விஷால், இளையராஜா இருவரது பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மிஷ்கின் பெயர் இடம்பெறவில்லை.



    துப்பறிவாளன் படத்தை இயக்குவது குறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த விஷால், “‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்குவதை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக கருதுகிறேன். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நான் உற்சாகமாக இருக்கிறேன்.

    இயக்குநர் தான் ஒரு படத்தை தலைமை ஏற்று (கேப்டன் ஆஃப் தி ஷிப்) வழி நடத்துகிறார். அந்த விதத்தில் பொறுப்புகளும் எனக்கு நிறைய உள்ளன. படத்தொகுப்பு, இசை, பின்னணி இசை என எல்லாத் துறைகளிலும் அவதாரம் எடுப்பது சிறப்பான அனுபவமாக கருதுகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

    மேலும் படிக்க: மாஸ்டர் ரிலீசில் யாரும் எதிர்பார்க்காத புதிய சிக்கல் - தள்ளிப் போகிறதா ரிலீஸ் தேதி?




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: