இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியிடப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது. தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் பொங்கலுக்கு வருவதற்குள் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அளவிட முடியாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. ஒருபக்கம் தியேட்டர்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. மறுபக்கம் ரசிகர்கள் கோயில் கோயிலாக படியேறி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் மாயூரநாதர் ஆலயத்துக்கு விஜய் திரைப்பட போஸ்டருடன் வந்த விஜய் ரசிகர்கள் மாயூரநாதர், அபயாம்பிகை அம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து விநாயகர் சன்னதியில் படம் வெற்றி பெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கி படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.
இப்படி பரபரப்பாக வாரிசு துணிவு ரிலீஸ் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் சில தியேட்டர்கள் எந்த படத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்ற குழப்பத்திலும் உள்ளன. குறிப்பாக ஒற்றைப்படை ஸ்கிரீன் உள்ள தியேட்டர்களில் எந்த படத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற திண்டாடி வருகின்றனர். இந்த குழப்பத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தியேட்டரில் துணிவு ரிலீஸா அல்லது வாரிசு ரிலீசா என்பதை டாஸ் போட்டு முடிவெடுத்த அந்த சம்பவம்தான் வைரலே.
இணையத்தில் பரவும் தகவலின்படி, அந்தமான் ஆனந்த் பாரடைஸ் தியேட்டரில் மொத்தம் 3 ஸ்கிரீன் உள்ளதாகவும் முதல் ஸ்கிரீனில் துணிவும், இரண்டாவது ஸ்கிரீனில் வாரிசும் ரிலீசாகிறது. மூன்றாவது ஸ்கிரீனில் எந்த படத்தை ரிலீஸ் செய்வதென தியேட்டர் நிர்வாகம் முன்னிலையில் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே டாஸ் போட்டு முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. டாஸில் வென்ற அஜித் ரசிகர்களுக்கு மூன்றாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவின் உண்மைத்தன்மை என்னவென்பது தெரியவில்லை என்றாலும் தற்போது தியேட்டர்களின் நிலைமை இதுதான் என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.