ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகின. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையிடப்பட்டது. தமிழ் திரையுலகில் இருதுருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் அஜித் - விஜய் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடியாக மோதுவதால், இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்குகளில் குவிந்தனர்.
காலை முதலே இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. வாரிசு குடும்ப செண்டிமெண்ட் படமாக இருப்பதாகவும், துணிவு ரசிகர்களை கவரும் பக்கா எண்டெர்டெய்னராக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். துணிவு திரைப்படத்தை எச்.வினோத் ஒரு சவாலாக எடுத்து செய்துள்ளார். முதல் பாதியில் ஏராளமான விஷயங்கள் இடம்பெறுகின்றன. அந்த காட்சிகள் படத்தின் வேகத்தில் அடுத்தடுத்து நகர்ந்து செல்கின்றன. ஆனால் அதற்கு பின் எச்.வினோத்தின் அசுரத்தனமான உழைப்பும், ஆழமான புரிதலும் உள்ளன. திரைக்கதை வேகத்தில் அவை கொஞ்சமும் மிஸாகாமல் ரசிர்களுக்கு கடத்தப்பட்டுள்ளது. வாரிசு படத்தை பொறுத்தவரை, துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், செண்டிமெண்ட் படங்களை தவிர்த்து வந்தார். அதில் இருந்து சற்று விலகி முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களுக்காக இந்தப் படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் விஜய். வாரிசு படத்தில் விஜய் தனக்கே உரிய துள்ளலுடன் நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் நடித்துள்ளார் விஜய்.
நடிகர் அஜித்தின் துணிவு ரிவியூ.. அடித்து ஆடியுள்ளாரா வினோத்? நறுக் விமர்சனம் இதோ!
இந்நிலையில் இரு படத்திலும் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு படத்தில் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறுது என விஜய் பேசிய வசனமும், துணிவு படத்தில் ரவீந்தர் இது தமிழ்நாடு.. உன் வேலையை இங்க காட்டாத என்ற வசனமும் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளனர். இரண்டு வசனங்களும் நிகழ்காலத்துக்கு ஏற்பவையாக இருப்பதால் தற்போது ட்ரெண்டாகி வருகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.