நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து அஜித் - எச்.வினோத் - போனிகபூர் கூட்டணியில் உருவாகி இருக்கும் மூன்றாவது திரைப்படம் துணிவு. இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி ஜான் கோக்கென், அஜய், தர்ஷன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், பால சரவணன், மகாநதி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆக்சன் உடன் மக்களுக்கு தேவையான ஒரு மிக முக்கிய கருத்தையும் கூறியிருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியின் சென்னை அலுவலத்தை கொள்ளையர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். அந்த வங்கியையும், அங்கு இருக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரகனி ஏற்கிறார். அவருக்கு சவால் விடும் வேலையை அஜித்குமார் கவனித்துக்கொள்கிறார். அந்த வங்கி எதனால் கொள்ளையடிக்கப்படிகிறது? வங்கி மீட்கப்பட்டதா? கொள்ளையர்கள் வீழ்த்தப்பட்டார்களா? அஜித் குழுவினர் என்ன ஆனார்கள்? என்பதே துணிவு.
இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலேயே படத்தின் கதை தொடங்கி விடுகிறது. பணம், பணம், பணம் இதை முன்னிறுத்தியே காட்சிகள் வலிமையுடன் நகர்கின்றன. பணத்திற்காக ஒவ்வொருவரும் எப்படி செயல்படுகிறார்கள். அவர்களை பணம் எந்த அளவுக்கு ஆட்டி வைக்கிறது, அவர்களை எங்கு கொண்டு சென்று நிறுத்துகிறது? மக்கள் பணம் எப்படி சுரண்டப்படுகிறது? மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்? வங்கியில் இருந்து நமக்கு வரும் ஒரு அழைப்பு நம்மை எப்படி சுரண்டும்? நாம் முதலீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, தனக்கே உரிய வகையில் மிகவும் Detail-ஆக, ஆழமான வசனங்களுடனும் கூறியுள்ளார் எச்.வினோத். துணிவு திரைப்படத்தில் அஜித் தன்னுடைய முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார். அவரின் உடல்மொழி, வசனங்கள், நக்கலான சிரிப்பு, ஸ்டைலான நடனம் என அனைத்தும் அட்டகாசமாகவும், அமர்களமாகவும் அமைந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத வேறொரு அஜித்தை ரசிகர்களின் கண் முன் நிறுத்தியுள்ளார் எச்.வினோத்.
தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. அதிகம் பாடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள். ஆனால் அஜித்தின் சமீப கால படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் இந்தப் படத்துல் மஞ்சு வாரியர் காட்சிகள் பல இடங்களில் கைத்தட்டல்கள் பெறுகின்றன. ஆக்சனில் அசத்துக்கிறார் மஞ்சு.
துணிவு திரைப்படத்தை எச்.வினோத் ஒரு சவாலாக எடுத்து செய்துள்ளார். முதல் பாதியில் ஏராளமான விஷயங்கள் இடம்பெறுகின்றன. அந்த காட்சிகள் படத்தின் வேகத்தில் அடுத்தடுத்து நகர்ந்து செல்கின்றன. ஆனால் அதற்கு பின் எச்.வினோத்தின் அசுரத்தனமான உழைப்பும், ஆழமான புரிதலும் உள்ளன. திரைக்கதை வேகத்தில் அவை கொஞ்சமும் மிஸாகாமல் ரசிர்களுக்கு கடத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது. அதேபோல் சில்லா சில்லா, கேங்ஸ்டா பாடல்கள் ஆடியோவாக வெளியான போது சில தரப்பு ரசிகர்களை கவரவில்லை. ஆனால் திரையரங்கில் அந்தப் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. அதேபோல் விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பை பாராட்ட வேண்டும். ஆழமான வசனங்கள், வேகமான திரைக்கதை. அதை கச்சிதமாக கடத்த வேண்டிய பொறுப்பு. அதை மிகச்சிறப்பாக எடுத்துகொண்டு செய்துள்ளார் விஜய் வேலுக்குட்டி. எச்.வினோத்தின் எண்ணங்களை தன்னுடைய படத்தொகுப்பில் Sharp ஆக்கிவிட்டார். இவர்களுக்கு கொஞ்சமும் சலைத்தவர் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் நிரவ்ஷா. இந்தப் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனி கலர் டோனை மெயிண்டன் செய்துள்ளார்.
மனிதன் எவ்வளவு சுயநலத்துடன் இருக்கிறான்? சுயநலமாக இருப்பதால்தான் அவன் மனிதன்! சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட ஐ.பி.எல் அணியை ரசிகர்கள் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி மீண்டும் வந்தபோது மக்கள் கொண்டாடினர். இது போன்ற ஏராளமான வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
துணிவு திரைப்படத்தில் சில நம்ம முடியாத விஷயங்கள் உள்ளன. லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ஆனால் அவற்றை தவிர்க்க இயலாது. அதேபோல் க்ளைமேக் சண்டைக்காட்சி சற்று நீளமாக உள்ளது போன்ற உணர்வை கொடுக்கிறது. இப்படி நடக்குமா என தோன்ற வைக்கலாம். ஆனால் அதை ரசிகர்கள் ஏற்றுகொள்கின்றனர். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசத்தையும் ரசிகர்கள் நுணுக்கமாக கவனிக்க வேண்டும், அதை எதற்காக சொல்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். அது சிலருக்கு சவாலாக அமையலாம்.
துணிவு படம் 20:20 கிரிக்கெட். அதில் ஏராளமான தோனியின் Helicopter சிக்ஸர்களும் உண்டு, மலிங்காவின் சில ஏர்கர்களும் உண்டு. ஆனால் ஆட்ட நாயகன் விருதை ஒட்டுமொத்த படக்குழுவினரும் பகிர்ந்துகொள்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thunivu