ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தின் புதிய போஸ்டர்.. வைரலாகும் மாஸ் அஜித்!

துணிவு படத்தின் புதிய போஸ்டர்.. வைரலாகும் மாஸ் அஜித்!

அஜித்

அஜித்

Thunivu : அஜித்குமார் நடித்த வரும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.  அதேசமயம் சில பேட்ச் ஒர்க் காட்சிகளையும் எடுத்து வந்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அதிக தாடியுடன்,  வெள்ளை நிற முடியுடனும் நடித்து வந்தார். அந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக அதே தோற்றத்தில் நடிகர் அஜித் வலம் வந்தார். குறிப்பாக, குடும்பத்தினருடன் வெளிநாடு சென்ற போதும் அதே தோற்றத்தில்தான் இருந்தார் அஜித்.

இந்த நிலையில் க்ளீன் சேவ் செய்த அஜித்குமாரின் தோற்றம் சமீபத்தில் வைரலானது இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டுள் கழித்து தன்னுடைய தோற்றத்தை அஜித்குமார் மாற்றினார். அதற்கான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படியாக அஜித்தின் புகைப்படங்கள்தான் வைரலாகி வந்ததேதவிர படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக நேற்று நள்ளிரவு துணிவு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. போஸ்டரில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு மாஸ் அஜித்தாக இருக்கிறார். அஜித்தின் புதிய ஸ்டில்லை அவரது ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

அஜித்குமார் நடித்த வரும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது. இந்த படத்திலிருந்து முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

First published:

Tags: Actor Ajith, Pongal