முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH - ஸ்காட்லாந்து ட்ரிப்.. மாஸாக கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. வைரல் வீடியோ!

WATCH - ஸ்காட்லாந்து ட்ரிப்.. மாஸாக கார் ஓட்டிச் செல்லும் அஜித்.. வைரல் வீடியோ!

அஜித்

அஜித்

Ajith Video: ஸ்காட்லாந்தில் கார் ஓட்டிச்செல்லும் அஜித்தின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான நடிகர் அஜித்தின் துணிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து துணிவு படம் கடந்த 8 ஆம் தேதி தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்திஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடி வெளியீடுக்கு பிறகு இந்தப் படம் உலக அளவில் டிரெண்டானது. நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களில் துணிவு ஹிந்தி பதிப்பு முதலிடத்தை பிடித்துள்ளது. நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தின் இயக்குநர் யார் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதிலிருந்து இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. துணிவு படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் ஸ்காட்லாந்தில் கார் ஓட்டிச்செல்லும் அஜித்தின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட படங்களும் சமூக வலைதளங்களில டிரெண்டானது.

First published:

Tags: Ajith