தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்: சறுக்கலை சந்தித்த அமீர்கான்?

#ThugsOfHindostan அமீர்கான் நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த மிக மோசமான படம் என ரசிகர்களிடம் இப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

Web Desk | news18
Updated: November 8, 2018, 10:07 PM IST
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்: சறுக்கலை சந்தித்த அமீர்கான்?
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் பட போஸ்டர்
Web Desk | news18
Updated: November 8, 2018, 10:07 PM IST
பாலிவுட்டில் அமீர் கான், அமிதாப் பச்சன், கத்ரினா கைஃப் நடிப்பில் பல கோடி பொருட்செலவில் தயாராகியிருக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள இத்திரைப்படம் குறித்த ஒரு தொகுப்பு இதோ.

பாலிவுட்டின் தற்போதைய வசூல் மன்னன் அமீர் கானும், எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முதல்முறையாக இணைந்திருக்கும் படம், பாலிவுட்டில் முதல்முறையாக 300 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் எனும் பல சிறப்புகளுடன் தயாராகியிருக்கும் படம் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். தீபாவளி விருந்தாக இன்று இப்படம் உலகம் முழுவதும் 7000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. இந்த வகையில் பாலிவுட்டில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் எனும் புதிய சாதனையை இப்படம் படைத்துள்ளது.

அமீர்கானின் முந்தைய படமான தங்கல், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றியை ருசித்ததால் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படமும் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 180 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது.

பெற்றோரைக் கொன்றவர்களை உற்றார் உதவியுடன் பழிதீர்க்கும் வழக்கமான கதையை சற்று வித்தியாசமாக ஆங்கிலேயர் ஆட்சி பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா.

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தக்கீஸ் எனும் கடல் கொள்ளையர்களை மையப்படுத்தி வெளியான கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ தக் (Confessions of a Thug) எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. கடல் கொள்ளையர்களைப் பற்றிய படம் என்பதால் ஹாலிவுட்டில் வெளியான பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்திற்கு சவால்விடும் வகையில் இத்திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்தனர். ஆனால் அமீர்கான் நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த மிக மோசமான படம் என ரசிகர்களிடமும் இப்படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

மேலும் கஜினியில் தொடங்கி தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துவரும் அமீர்கானின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரும் சறுக்கலாக அமைந்திருப்பதாக விமர்சகர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Also watch
Loading...
First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்