Home /News /entertainment /

ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ படத்தின் கதை இதுதான்..

ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ படத்தின் கதை இதுதான்..

ஜோதிகா

ஜோதிகா

ஜோதிகாவின் 50 வது படமாக உடன்பிறப்பே தயாராகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில், அதிகம் நடித்திராத கிராமத்து வேடத்தில் ஜோதிகா தோன்றுகிறார்.

    கிராமத்து கதை என்றால் குடும்பம், உறவுகளே பிரதானமாக இருக்கும். உடன்பிறப்பே என்ற படத்தின் பெயரிலேயே இதன் கதை உள்ளது. மாதங்கியும், வைரவனும் உடன்பிறப்புகள். மாதங்கியின் கணவன் சற்குணத்தால் இவர்கள் உறவில் விரிசல் விழுகிறது. அண்ணனா, கணவனா என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது



    இதில் மாதங்கியாக ஜோதிகாவும், உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

    Photos : வார்த்தையே இல்லை’..ஷிவானியின் அழகை வர்ணித்த ரசிகர்..



    முக்கிய வேடத்தில் சூரி. டி.இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் சரவணன் படத்தை இயக்கி வருகிறார். இவர் 2015 இல் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கியவர். கிராமத்துப் பின்னணியில் குடும்ப உறவுகளின் நெகிழ்ச்சியில் படம் தயாராகிறது. கொஞ்சம் கிழக்குசீமையிலே சாயலை கொண்டிருக்கும் கதையிது என்றாலும், திரையில் பார்க்கையில் அது தெரியாதாம்.

    Also Read : அழகியே.. பிளாக் அவுட் ஃபிட்டில் கலக்கும் அதுல்யா -போட்டோஸ்

    அக்டோபர் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் உடன்பிறப்பே நேரடியாக வெளியாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor Surya, Actress Jyothika

    அடுத்த செய்தி