• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நான் ஆன்டியா...? கோபத்தில் கரீனா கபூர்

நான் ஆன்டியா...? கோபத்தில் கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வருவது இது முதல் தடவை அல்ல.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமூக வலைதளங்களில் ஆன்டி என்று அழைக்கப்பட்டதற்கு நடிகை கரீனா கபூர் பதிலளித்துள்ளார்.

    பாலிவுட் பிரபலங்கள் சோனாக்‌ஷி சின்ஹா, சோனம் கபூர், கபில் சர்மா, கரன் ஜோஹர், கரினா கபூர் ஆகியோர் கலந்து கொண்ட வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

    நடிகர் அர்பாஜ் கான் தொகுப்பாளராக கலந்து கொண்ட இந்த வெப் சீரிஸில் பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்கள் மீது சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து பதிலளித்தனர்.

    2 நிமிடம் ஓடக்கூடிய ட்ரெய்லரில், நடிகை கரீனா கபூரிடம் தொகுப்பாளர் அர்பாஜ் கான், சமூக வலைதளத்தில் ‘நீங்கள் இப்போது ஆன்டி, இளம்பெண் போல நடிக்க வேண்டாம்’ என ரசிகர் ஒருவர் பதிவிட்ட பதிவை காண்பித்தார்.

    முதலில் பதிவை பார்த்து சிரித்த கரினா கபூர், பிறகு கோபத்துடன் ‘பிரபலங்களின் உணர்ச்சிகள் குறித்து மக்கள் அறியாமல் இருக்கிறார்கள். பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளுக்கு எந்த உணர்ச்சிகளும் இல்லை என்று நினைக்கிறார்கள். நாம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் ’ என்று கூறியுள்ளார்.



    மேலும் பிரபலங்களை குறிவைத்து சமூக வலைதளங்களில் வரும் கடுமையான விமர்சனங்களை கண்டு நடிகை கரீனா கபூர் வருத்தமடைந்துள்ளார்.

    கரீனா கபூர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வருவது இது முதல் தடவை அல்ல. ஆனால் தன் மீது வரும் விமர்சனங்கள் குறித்து அதிகமாக வருத்தப்படாதவர் கரீனா கபூர். அவர் தற்போது ‘குட் நியூஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    Also Watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: