Home /News /entertainment /

இன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்

இன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்

இன்று நேற்று நாளை பட போஸ்டர்

இன்று நேற்று நாளை பட போஸ்டர்

  • News18
  • Last Updated :
    நடிகர் விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை படம் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் ‘இன்று நேற்று நாளை'. இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கருணாகரன், ஜெயப்பிரகாஷ், ரவி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனை ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் – ஸ்டுடியோ கிரீன்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. அறிவியல் புனைவு படமாக வெளியாகிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

    இந்நிலையில் இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த ட்வீட்டை குறிப்பிட்டு படத்தில் நானும் கருணாகரனும் இருக்கிறோமா என்று நடிகர் விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த சி.வி.குமார், நீங்கள் இல்லாமலா எனக் கூறியுள்ளார்.

    இதனால் இந்தப் படத்தில் விஷ்ணுவிஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது. மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் தற்போது சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி