'செக்க சிவந்த வானம்' படத்தின் 3-வது பாடல் வெளியீடு

செக்க சிவந்த வானம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    செக்கச் சிவந்த வானம் படத்தின் 3-வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    `காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

    இயக்குநர் மணிரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் படத்தின் இரண்டு பாடல்களை படக்குழுவினர் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான செவந்து போச்சு நெஞ்சு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    வின்க், சாவன், கானா மற்றும் ஹங்காமா உள்ளிட்ட இணையதளங்களில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு யூ-டியூபில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.



    Published by:Saravana Siddharth
    First published: