திரைப்படமாகும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வாழ்க்கை வரலாறு?

அஸ்வின்

அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பிய பிறகே, இந்தத் திரைப்படம் குறித்த உண்மைநிலை தெரியவரும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவதாக கோடம்பாக்கத்தில் பலமான பேச்சு கிளம்பியுள்ளது.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை சகட்டுமேனிக்கு எடுக்கிறார்கள். அதிலும் கிரிக்கெட்டுக்கே முன்னுரிமை. டெண்டுல்கர், டோனியைத் தொடர்ந்து கபில்தேவ், பெண்கள் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோரது வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாகின்றன. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை 800 என்ற பெயரில் திரைப்படமாக்க முயன்றதும், எதிர்ப்பு காரணமாக முரளிதரனாக நடிக்கயிருந்த விஜய்சேதுபதி அப்படத்திலிருந்து விலகியதும் சமீபத்திய நிகழ்வுகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கை சுழற்பந்து வீரரை வைத்து எடுத்தால்தானே பிரச்சனை, இந்திய அணிக்காக விளையாடும் தமிழரின் வாழ்க்கை வரலாறை எடுத்தால் என்ன என்று யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. அதற்கு ஏற்ற ஆளாக அஸ்வினை தேர்வு செய்திருக்கிறார்கள். அஸ்வினாக அசோக் செல்வன் நடிக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பிய பிறகே, இந்தத் திரைப்படம் குறித்த உண்மைநிலை தெரியவரும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: