முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளையராஜா பாடல்களால் உருவான குறும்படம்!

இளையராஜா பாடல்களால் உருவான குறும்படம்!

தென்றல் வந்து தீண்டும் போது குறும்பட போஸ்டர்

தென்றல் வந்து தீண்டும் போது குறும்பட போஸ்டர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இளையராஜாவின் ரசிகர்களில் ஒருவரும், குறும்படத் தயாரிப்பாளருமான அருள் சங்கர் என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படம் தான் ‘தென்றல் வந்து தீண்டும் போது’.

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு என்ற பாடலுடன் தொடங்கும் இந்தக் குறும்படத்தை இளையராஜாவின் பாடல்கள் தான் நகர்த்திச் செல்கிறது.

இந்தக் குறும்படத்தில் இளையராஜாவின் தீவிர ரசிகராக சூரஜ் நடராஜன் நாகோஜியும், அவருக்கு ஜோடியாக யாழினி என்ற கதாபாத்திரத்தில் ஜாக்குலின் பிரகாஷும் நடித்துள்ளனர்.

இசையையும் பாடலையும் களமாகக் கொண்டுள்ள இந்தக் குறும்படத்துக்கு நரேன் பாலகுமார் பின்னணி இசையமைத்துள்ளார்.

இக்குறும்படத்தை எழுதி இயக்கிய அருள் சங்கர் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். இளம் வயதிலிருந்தே எனக்கு சினிமா மீது தீராக் காதல். 2009-ம் ஆண்டு குறும்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். தென்றல் வந்து தீண்டும் போது படத்தின் கதை எனக்கும், எனது மனைவிக்கும் இடையே நடந்த ஒரு நிகழ்வு.

இளையராஜாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களுக்கு இந்தக் குறும்படத்தைக் கொண்டு சென்றேன்” என்றார்.

ரஷ்யா, அமெரிக்கா, கொல்கத்தா, ஹைதராபாத், பஞ்சாப் என உலகம் முழுவதும் பல்வேறு குறும்பட விழாக்களுக்கு இந்தக் குறும்படம் அனுப்பப்பட்டு, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட என இதுவரை 22 விருதுகளை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

' isDesktop="true" id="198263" youtubeid="PRCQ5VthiWw" category="entertainment">

First published:

Tags: Ilayaraja songs