Home /News /entertainment /

இயக்குநர் பாரதிராஜா வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு!

இயக்குநர் பாரதிராஜா வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு!

இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா

  • News18
  • Last Updated :
    இயக்குநர் பாரதிராஜா வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்து இயக்குநர் இமயமாக உயர்ந்து நிற்பவர் பாரதிராஜா. இயக்குநராக மட்டுமின்றி ஆயுத எழுத்து, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாரதிராஜா, ராக்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் சென்னை மாம்பலத்தில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் விலையுயர்ந்த ஐபோன், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் புகாரை அடுத்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். முன்னதாக நடிகர் பார்த்திபன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரின் வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    வீடியோ பார்க்க: பிரபல நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Director bharathiraja

    அடுத்த செய்தி