• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்குகளை திறக்க அமைச்சரை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..

திரையரங்குகளை திறக்க அமைச்சரை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..

அமைச்சரை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..

அமைச்சரை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்..

திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். 

  • Share this:
    ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. கொரோனா இரண்டாம் அலை தணிந்திருக்கும் நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். 

    கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே தமிழகத்தில் திரையரங்கு தொழில் நசிவை சந்தித்தது. முறையற்ற வர்த்தகமே இதற்கு காரணம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் வருவதில்லை. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் தொகை கேட்கும். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்க வேண்டி வரும். இந்த சூதாட்டத்தால் தனித் திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. வணிக வளாகங்களாகவும், குடோன்களாகவும், திருமண மண்டபங்களாகவும் திரையரங்குகள் மாற்றப்பட்டன. கொரோனா ஊரடங்கு பாதிப்பை அதிகப்படுத்தியது. திரையரங்குக்கு வராமல் வீட்டிலேயே ஓடிடி மூலம் படங்கள் பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளுக்கு இனி வருவார்களா என்ற சந்தேகமும் உள்ளது.



     Photos : காரில் அமர்ந்தப்படி க்யூட் போஸ் கொடுத்த சமந்தா..

    கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், ஆகஸ்ட் ஆரம்பத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து, திரையரங்குகளை திறக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டனர்



    Also Read : வேதாளம் தெலுங்கு ரீமேக்.. சிரஞ்சீவியின் தங்கையாக நடிப்பது யார் தெரியுமா?

    கேரளாவில் திரையரங்குகள் டிசம்பருக்கு முன் திறக்கப்பட வாய்ப்பில்லை என அம்மாநில அமைச்சர் ஷாஜி செரியன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவிலும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் சில மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஓரிலக்கத்தில் உயர்ந்து வருவதால் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பது சந்தேகமே. முக்கியமாக பெரிய பட்ஜெட்டில் மாஸ் நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்கள் மட்டுமே திரையரங்கில் படத்தை வெளியிட ஆர்வமாக உள்ளனர். 80 சதவீத தயாரிப்பாளர்கள் திரையரங்குக்குப் பதில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடவே விரும்புகின்றனர். கிடைக்கிற பணம் உடனடியாக கைக்கு வரும் என்பதே அதற்கு காரணம்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் திரையரங்குகள் திறந்தாலும் வலிமை, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்று மாஸ் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் திரையரங்குக்கு செல்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: