ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

100 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி வேண்டும் - தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள்

100 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி வேண்டும் - தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள்

தியேட்டர்

தியேட்டர்

புத்தாண்டு முதலாவது 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரேனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் திரையரங்குகள் மூடப்பட்டன. 7 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் உரிமையாளர்கள் வரை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர். அதேபோல் திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் 50சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அமரவைத்து திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதி வழங்கியது. இருப்பினும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வராததால் திரையரங்கிற்கு மக்கள் வருகையின்றி மூடும் நிலை உருவானது.

மேலும் படிக்க: மாஸ்டருக்கு முன்னுரிமை... ஈஸ்வரன் படக்குழுவின் முயற்சி தோல்வி?

இந்த நிலையில் வரும் பொங்கல் முதல் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் 2021 புத்தாண்டு முதலாவது 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் முதல்வர செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதியுளளனர்.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

First published:

Tags: Eeswaran Movie, Kollywood, Master, Theatre