ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி -தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி -தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

ஓ.டி.டி

ஓ.டி.டி

புதிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓ.டி.டி யில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய திரைப்படங்களின் ஓ.டி.டி. வெளியீடு குறித்து ஆலோசிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு புதிய திரைப்படங்களுக்கான ஓ.டி.டி வியாபாரம் விரிவடைந்துள்ளது.  அதில் நேரடி வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியிட்டிருக்கு பிறகான ஓ.டி.டி வெளியீடு என இரண்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிந்தைய ஓ.டி.டி உரிமை நான்கு வாரத்தில் வெளியிடுவது என கையெழுத்தாகிறது.  அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள்,  விநியோகஸ்தர்கள் என திரையரங்கை சார்ந்த அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தெலுங்கு திரையுலகில் உள்ளது போல, புதிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓ.டி.டி யில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

WATCH: இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலகத் தலைவன் பட டீசர்!

இதற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளது.

Published by:Srilekha A
First published:

Tags: OTT Release