முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் திடீர் மறுப்பு

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் திடீர் மறுப்பு

ஈஸ்வரன் பட ஸ்டில்

ஈஸ்வரன் பட ஸ்டில்

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தை தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் ஒரே நாளில் வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. அதனால், ஆத்திரமடைந்த திரையரங்க உரிமையாளர்கள் ஈஸ்வரன் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம்‘ஒரே நாள் திரையரங்கு மற்றும் ஒடிடி வெளியாவதை அனுமதித்தால் அனைத்து திரைப்படங்களும் இதுபோல முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Eeswaran Movie, Simbu