திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை: உரிமையாளர்கள் வேதனை

தியேட்டர்

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டும் அதற்கான வரவேற்பு மிக மிக குறைவாகவே உள்ளது. ஒரு படத்திற்கு 10 பேர் மட்டுமே வருவதால் திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

 • Share this:
  கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் நவம்பர் 10-ஆம் தேதி முதல் அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டும் அதற்கான வரவேற்பு மிக மிக குறைவாகவே உள்ளது. கொரோனா அச்சத்தின் காரணமாகவும் தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளர்களின் பிரச்சினை காரணமாகவும் திரையரங்குகளில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

  தற்போது vpf பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ள நிலையில் பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. காலப்போக்கில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் திரையரங்குகள் மீண்டும் மீண்டு எழும் என்றும் ரசிகர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித் மாதிரியான மாஸ் நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும்போது திரையரங்குகளின் நிலை மாறும் என ரசிகர் பிரகாஷ் கூறியுள்ளார்.


  இந்த நிலையில் தற்போது இருக்கும் மந்தமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், சிம்பு நடித்த ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் போது திரையரங்குகளின் நிலை மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
  Published by:Karthick S
  First published: