Big boss 4 | பிக் பாஸ் வீட்டில் அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி இடையே தொடங்கிய மோதல்

Big boss 4 | பிக் பாஸ் வீட்டில் அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி இடையே தொடங்கிய மோதல்

அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்தி

பிக் பாஸ் வீட்டில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே மோதல் தொடங்கியதாக வீடியோ வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் வழக்கமாக மூன்று ப்ரோமோக்கள் வெளியாகும். அதில் இன்று இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் ஒரு சில முக்கிய காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், சுரேஷ் சக்ரவர்த்தி நான் செய்தியாளர்களிடம் பேச மாட்டேன். அவர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. சமையலறையில் நடைபெறும் இந்த வாக்குவாதத்தில், பேசும் போது எச்சில் தெறிக்கும் என்று நீங்கள் கூறியது என்னை காயப்படுத்தியது என அனிதா கூறுகிறார். தான் அவ்வாறு கூறவில்லை என மறுக்கும் சுரேஷ், ஒன்னும் இல்லாத ஒன்றை பெரிதாக்குவது எனக்கு பிடிக்கவில்லை என்கிறார்.



அதற்கு அனிதா எச்சத்தில் தெறிக்கும் என்று கூறிய மிகவும் தாழ்த்திய வார்த்தை என்று கூறிய நிலையில் தனக்கு பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதாடுவதாக சுரேஷ் குற்றம் சாட்டுகிறார். அதற்கு தேவைப்பட்டால் குறும்படம் பாருங்கள் என்று அனிதா கூற, குறும்படம் ஏன் நெடும்படமே பார்க்கலாம் என கூறிவிட்டு சுரேஷ் அந்த இடத்தில் இருந்து நகர்கிறார். அந்த இடத்தில் சனம், ஷிவானி மற்றும் ரேகா ஆகியோர் இந்த நிலையில் ரேகா, அனிதா சம்பத்தை சமாதானப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.



Also read... Big boss 4 | பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்.. சக போட்டியாளர்களால் மனமுடைந்த ஷிவானி..

முன்னதாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில், அறந்தாங்கி நிஷா பார்ப்பதற்கு எனது அம்மா போல இருக்கிறார் என நிகிழ்ச்சியுடன் கண் கலங்கி கூறுகிறார். மேலும் அம்மா மிகவும் டார்க்காக இருப்பார், நகை போட்டால் தனது நிறம் மிகவும் டார்க்காக தெரியும் என தன்னையே தாழ்த்தி கொள்வார்.

இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் பெற்றோர் சந்திப்பு போன்றவற்றிற்கு வர கூட மிகவும் யோசிப்பார். கருப்பு நிறத்தை ஒரு தாழ்வாக எண்ணாமல் அதை ஒரு நகைச்சுவையாக மாற்றி மற்றவர்களிடத்தில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என நிஷாவை புகழ்ந்தார். மேலும் எங்க அம்மா, நிஷா அக்காவிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என விரும்புவதாக அனிதா சம்பத் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: