கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.
'செக்கச்சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களை முடித்துவிட்டு, அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜோதிகா.
ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இயங்கிவந்த படக்குழு, இன்று காலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Also read... சூர்யா படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும்... ரசிகர்கள் ஹேப்பி...!
படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் தலைமையாசிரியையாக வலம் வரும் ஜோதிகா, மாணவர்களிடம் அன்பாகவும் தன் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் சமூக விரோதிகளிடம் ராட்சசியாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
"தீமை நடக்கிறது என்று சொல்லி அதனை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள்" என்று ட்ரெய்லரில் ஜோதிகா கூறும் வசனம் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Jyothika, Raatchasi