OTT: இந்த படங்கள் எல்லாம் OTT-க்கு செல்கிறதா? திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!

திரையரங்கு

தற்போதைய சூழலின் படி ஜூலை முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் சூழலில் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் அடுத்தடுத்து ஓடிடி-க்கு செல்வது திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மீண்டும் திரையரங்குகளை திறப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரக்கூடிய படங்கள் என எதிர்பார்க்கப்படும் சில படங்கள் அடுத்தடுத்து ஓடிடி-க்கு செல்வதால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூர்யாவின் சூரரைப்போற்று தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்கள் ஏற்கனவே ஓடிடி-யில் வெளியாகி விட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை மட்டுமே தியேட்டர் அதிபர்கள் பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால் தற்போது இந்த படமும் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய தொகைக்கு விற்பனை ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை படமும் அமேசான் பிரைம் தளத்திற்கு விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ரஞ்சித்தின் கபாலி, காலா மற்றும் ஆர்யாவின் டெடி ஆகிய படங்களுக்கு ஓடிடியில் ஏற்கனவே பலத்த வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தை வாங்க கடும் போட்டி நிலவியதாகவும் இறுதியில் அமேசான் பிரைம் நிறுவனம் ஒரு பெரிய தொகையை கொடுத்து இப்படத்தை கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் நெற்றிக்கண் படமும் ஏற்கனவே ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமல்லாது நரகாசூரன், கடைசி விவசாயி, வாழ் போன்ற எதிர்பார்ப்பில் இருக்கும் சிறு பட்ஜெட் படங்கள் கூட ஓடிடி-க்கு செல்வது திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Also read... Actress Roja: நடிகை ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? ஃபேமிலி வீடியோ, ஃபோட்டோவை வைரலாக்கி வரும் ரசிகர்கள்!

தற்போதைய சூழலின் படி ஜூலை முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நேரத்தில் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத பட்சத்தில் ஏற்கனவே வெற்றி பெற்ற விஜய்யின் மாஸ்டர் ஓடிடியில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று போன்ற படங்களை மறுவெளியீடு செய்யவும் திரையரங்க உரிமையாளர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: