ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Samuthirakani: பாலிவுட்டிற்குச் செல்லும் சமுத்திரக்கனி படம்!

Samuthirakani: பாலிவுட்டிற்குச் செல்லும் சமுத்திரக்கனி படம்!

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

தெலுங்கில் தபு நடித்திருந்த வேடத்தில் மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்த சமுத்திரக்கனி தெலுங்கில் நடித்திருந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. 

2020 சங்கராந்திக்கு ஆல வைகுந்தபுரமுலு திரைப்படம் வெளியானது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த இத்திரைப்படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். வெளிநாட்டு கார், கையில் பழைய காலத்து குடை என்று கான்ட்ராஸ்டான கதாபாத்திரத்தில் அவர் செய்திருந்த வில்லத்தனம் பேசப்பட்டது. ஜெயராம், தபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ஆல வைகுந்தபுரமுலு படத்தை இந்தியில் அல்லு அரவிந்துடன் இணைந்து ஏக்தா கபூர் தயாரிக்கிறார். இளம் நடிகர் கார்த்திக் ஆர்யன் ஹீரோ. நாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். ரோஹித் தவான் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.

Also read... Santhanam: மாஸ்டர் கதாசிரியரின் படத்தில் நடிக்கும் சந்தானம்...!

முதலாளி, தொழிலாளியின் குழந்தைகள் இடம்மாறி வளரும் அதரப்பழைய கதைதான் ஆல வைகுந்தபுரமுலு படம். இந்தவகைப் படங்களில் உண்மை அனைவருக்கும் தெரிய வருவதே படத்தின் கிளைமாக்ஸாக இருக்கும். ஆல வைகுந்தபுரத்தில் தொழிலாளியின் வீட்டில் வளரும் முதலாளியின் மகனுக்கு (ஹீரோ) பாதியிலேயே உண்மை தெரிந்துவிடும். எனினும், அதனை வெளிப்படுத்தாமல் கிளைமாக்ஸ்வரை கதையை நகர்த்துவதுதான் இந்தப் படத்தின் பலம், வித்தியாசம் எல்லாமே. த்ரி விக்ரம் வழக்கமான குடும்ப உறவுகளின் பின்னணியில் இதனை எடுத்திருந்தார்

தெலுங்கில் தபு நடித்திருந்த வேடத்தில் மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சமுத்திரக்கனியின் வில்லன் வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director samuthrakani