போயஸ்கார்டனுக்கு ரஜினி மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் திடீர் வருகையால் பரபரப்பு..

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை போயஸ்கார்டனுக்கு ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திடீர் வருகையால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினிகாந்த் பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வளைதளங்களில் உலாவந்தது. இந்நிலையில்,  ரஜினிகாந்த் தனது உடல் நிலை சரி இல்லை என்பதை உறுதி செய்த நடிகர் ரஜனிகாந்த்,  தனது அரசியல் நிலைப்பாடு குறித்து, விரைவில் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து, மக்களுக்கு தெரிவிப்பேன் என, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இதனால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரோ என்ற கருத்து அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த சூழலில்தான், இன்று காலை, சென்னை மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர் பகுதி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என சிலர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்திற்கு இன்று காலை நேரில் வந்தனர்.

Also read... கோவை: 17 வயது நடந்த சிறுமிக்கு திருமணம்.. மீண்டும் கடத்தப்பட்டு இரண்டாவது திருமணம்.. இருவர் போக்சோவில் கைது



அவர்கள் அனைவரும், 'ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்ப இல்லனா? எப்பவும் இல்ல? என்று வாசகத்துடன் கூடிய டீ -சர்ட் அணிந்து இருந்தனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் எனவும், உண்ணாவிரதம் மேற்கொண்டாவது அவரை அரசியலுக்கு வர வைப்போம் என அவரது ரசிகர்கள் கோஷமிட்டு சென்றனர்.

மேலும் ' ஓட்டுன்னு போட்டால் ரஜினிக்குதான்,  நீங்க வாங்க ரஜினி.. எங்களது ஆதரவு உங்களுக்குதான் ' என போயஸ் கார்டன் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: