சிம்பு நடிப்பில் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் வந்தால் அதிசயம். இந்த வருடம் அவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின்றன. ஈஸ்வரன் ஏற்கனவே வெளியான நிலையில், மாநாடு ஆயுதபூஜையை ஒட்டி வெளியாகிறது. அத்துடன் ஹன்சிகாவுடன் சிம்பு நடித்திருக்கும் மஹாவும் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது சிம்பு கௌதம் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரும் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. கன்னடப் படமொன்றின் தமிழ் ரீமேக்கான இதனை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா பெருந்தொற்றால் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று முதல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கும் கௌதம் கார்த்திக், புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
A New Beginning,
The start of a journey that I've spent a long time waiting for. #Day1#PathuThala pic.twitter.com/4bbk9wAoO2
— Gautham Karthik (@Gautham_Karthik) August 26, 2021
Also read... களத்தில் இறங்கிய கலைஞர் தொலைக்காட்சி - முதல் படமாக சார்பட்டா பரம்பரையை வாங்கியது!
வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு முடிந்ததும் சிம்பு பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அத்துடன் மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் அவர் நடிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் சிம்பு கௌதம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.