விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2...!

விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. அங்கு படம் பட்டையை கிளப்பியது. தமிழைவிட தெலுங்கில் படத்துக்கு அமோக வரவேற்பு.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய் ஆண்டனி நடிப்பில் மெகா வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனியின் ஆரம்பகால படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில, கச்சிதமான திரைக்கதையில் ரசிக்கப்படும் விதத்தில் இருந்தன. ஆக்ஷன் ஹீரோவாக அவர் நடிக்க ஆரம்பித்த பின் படங்கள் தோல்வியடைய ஆரம்பித்தன. இந்நிலையில் சசி இயக்குத்தில் பிச்சைக்காரன் படத்தில் நடித்தார். படம் பம்பர் வெற்றி. வெற்றி பெறும் என தெரியும், ஆனால், இந்தளவு மெகா வெற்றியை பெறும் என எதிர்பார்க்கவில்லை என சசியே கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிச்சைக்காரன் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. அங்கு படம் பட்டையை கிளப்பியது. தமிழைவிட தெலுங்கில் படத்துக்கு அமோக வரவேற்பு. இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டாம் பாகத்தில் சசி இல்லை.



Also read... நான்கு மொழிகளில் வெளியாகும் ஜெய் பீம் - புகைப்படங்கள்!

விஜய் ஆண்டனியே படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்கிறார். பிச்சைக்காரன் தெலுங்கில் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்கின்றனர்முதல் பாகத்தின் பெருமையை இரண்டாம் பாகம் காப்பாற்றினால் போதும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: